பிரித்தானியாவில் சிறுவர்களை பாதுகாக்க இன்ஸ்டாகிராம் நடவடிக்கை
#Instagram
#Social Media
#England
#Banned
Prasu
1 month ago
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை அறிமுகப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் இன்ஸ்டாகிராம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை பார்க்கும்போது அது தொடர்பில் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
“இந்த எச்சரிக்கைகள் இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க உதவும் எங்கள் தற்போதைய வேலையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடங்களில் குழந்தைகளின் நலன் கேள்விக்குரியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்தியுள்ளன.
(வீடியோ இங்கே )