நாளை தமிழரசு கட்சி தேர்தலின் பின்னர் நடக்கப் போவது என்ன?

#SriLanka #M. A. Sumanthiran #Trincomalee #Election #Lanka4 #TNA #sritharan
Mayoorikka
3 months ago
நாளை தமிழரசு கட்சி தேர்தலின் பின்னர் நடக்கப் போவது என்ன?

தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கும் விடயமும் ஆவலோடு எதிர்ப்பார்த்து இருக்கும் விடையமான தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

 இந்தநிலையில் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில் சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் சம அளவிலான ஆதரவுகளே காணப்படுவதாக தெரிய வருகின்றது.

 இவர்களில் யாராவது ஒருவர் தலைமைத்துவ பதவிக்கு தெரிவாகும் பட்ஷத்தில் கட்சிக்குள் பிளவு மற்றும் உட்பூசல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகின்றது. 

 அதேவேளை பிரதேச ரீதியான வேறுபாடுகளுக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒருசாரார் கூறுகின்றனர். அதாவது யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வேறுபாடு அதிகரிக்கும்.

 சிறிதரன் வெற்றியடைந்தால் சுமந்திரனுக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழ் தேசியவாதிகளிடம் ஆதரவு குறையும். சிறீ தரனுக்கு அதிகரிக்கும். இருவருக்கும் மறைமுக பேரம் நடக்கும்.

 சாணக்கியணைப் பொறுத்தவரை வடக்கு ஆத வு மிக குறைவாகும். அதேபோல் வெளி நாடுகளில் சாணக்கியனுக்கு உள்ள ஆதரவு குறையும். மாறிமாறி இரு வேட்பாளர்களது ஆதரவாளர்களும் துரோகித் பட்டம் சூட்டிக் கொள்வார்கள். 

 இதனால் இலாபம் அடைவது மற்ற இதர கட்சிகள் தான். ஆகவே தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் அபிலாசைகளை நோக்கமாக கொண்டு யார் வென்றாலும் எல்லோரும் இணைந்து தமிழரசுக் கட்சியை  வளர்ப்பதோடு, தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.

-Lanka4 ஊடகத்தின் பிரத்தியேக பார்வை-