அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்ஸ் இளவரசி

#Hospital #government #Queen #Surgery #Wales #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி இரண்டு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கெனிங்ஸ்டன் அரண்மனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 

அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க இருக்கிறார். 

தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்," என அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதிக பிரபலமானவரும், ராயல் குடும்பத்தில் அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவருமான கேட் மிடில்டன் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!