பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
#Death
#people
#Brazil
#Flood
#HeavyRain
#Rescue
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக அம்மாகாணத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



