டெக்சாஸ் ஹோட்டலில் வெடி விபத்து : 21 பேர் படுகாயம்!
#SriLanka
#world_news
#Hotel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஃபோர்ட் வொர்த்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெக்சாஸ் ஹோட்டலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாக மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவினால் இந்த வெடிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



