141 விமானங்களை இரத்து செய்துள்ள அலாஸ்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம்!
#SriLanka
#Flight
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Dhushanthini K
1 year ago

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 737 Max 9 விமானத்தின் கதவுகளில் கோளாறு இருப்பது டய கண்டுப்பிடிக்கப்பட்டது.
அண்மையில் அலாஸ்காவில் இருந்து பயணமான விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தபோது கதவுகள் உடைந்ததால் ஓரிகானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து விமானங்களை பல முறை பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான பரிசோதனையின்போது மேற்படி கதவுகளில் பொறுத்தப்பட்டிருந்த ஆணிகள் தளர்வாக இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். இதனயைடுத்து அவற்றை சரி செய்வதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், ஏறக்குறைய 141 விமானங்களை ரத்து செய்ய அலாஸ்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



