அயர்லாந்தில் திறமையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

#SriLanka #Job Vacancy #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Ireland
Thamilini
1 year ago
அயர்லாந்தில் திறமையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

அயர்லாந்து அரசாங்கம் திறமையான தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அனுமதிகளை வழங்கியுள்ளது. 

நைஜீரியாவின் குடிமக்கள் உள்பட  ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே உள்ள ஐரோப்பிய ஒன்றியம், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன், இங்கிலாந்து அல்லது சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள பிரஜைகளும் அங்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம். 

இதன்மூலம் அயர்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. 

உற்பத்தி மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் மேலாண்மை, இயற்கை மற்றும் சமூக அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன.

கூடுதலாக, சுகாதாரப் பணியாளர்கள், கற்பித்தல் வல்லுநர்கள், வணிகம் மற்றும் நிர்வாக வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள், கலை மற்றும் ஊடக வல்லுநர்கள், வடிவமைப்பு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, அத்துடன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கான தொழில்வாய்ப்புகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இந்தத் துறைகளுக்கு முக்கியமான திறன்கள் வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரத்திற்கு தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து நிபுணத்துவம் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!