வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகளை விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு!
#SriLanka
#Israel
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Gaza
Dhushanthini K
1 year ago

வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் போராளிகளை முற்றிலுமாக விரட்டியடித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பை வெளியேற்றுவது குறித்து தற்போது கவனம் செலுத்தி வருவதாக இஸ்ரேல் படைகள் வலியுறுத்தியுள்ளன.
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலால் 22,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.



