அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் விமானம் : பறந்துகொண்டிருந்தபோது ஜன்னல் உடைந்ததால் பரபரப்பு!

#SriLanka #Flight #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் விமானம் : பறந்துகொண்டிருந்தபோது ஜன்னல் உடைந்ததால் பரபரப்பு!

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் ஓரிகானில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் 06 பணியாளர்களுடன் , ஓரிகானின் போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு, புறப்பட்ட விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. 

குறித்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் ஜன்னலில் மிகப் பெரிய துவாரம் ஏற்பட்ட நிலையில், மேற்படி தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த ஜன்னலின் அருகில் தாய் மற்றும் அவருடைய மகன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத அசம்பாவிதத்தில் காயமடைந்தவர்கள், அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. 

ஆனால் உடனடியாக ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. "இதுபோன்ற நிகழ்வு அரிதானது என்றாலும், எங்கள் விமானக் குழுவினர் பயிற்றுவிக்கப்பட்டு நிலைமையை பாதுகாப்பாக நிர்வகிக்கத் தயாராக இருந்தனர்." என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!