15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட வணிக கப்பல்

#Somalia #Ship #Indian #Kidnap #Sea #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட வணிக கப்பல்

ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) கடத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த கப்பலில் லைபீரியாவின் கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை, கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நிலைமையை சமாளிக்க நகர்ந்து வருகிறது என தெரிவித்தார். 

மேலும், இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. 

அப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த நிலைமையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. 

நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!