வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவரின் வாடி தீயிட்டு எரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவரின் வாடி தீயிட்டு எரிப்பு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் இன்று (01.01) மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரையை நோக்கி விரைந்து தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

செல்வரத்தினம்-சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே எரிக்கப்பட்டுள்ளதோடு பத்து இலட்சம் பெறுமதியான வலைகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1704117696.jpg

முன்பகை காரணமாகவே சந்தேக நபர் தனது வாடியை கொழுத்தியதாகவும் சந்தேக நபர் மருதங்கேணி பொலிசில் ஏற்கனவே முறைப்பாடு அளித்தும் பொலிசார் அவரை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆலயத்தில் லொத்தர் போடப்பட்டு இந்த வருட நாள் தொழிலைக் குறித்த குடும்பஸ்தரே மேற்கொண்ட  நிலையில் அவருடைய வாடி தீயிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் வருகை தந்ததோடு கட்டைக்காடு கடற்றொழிலாளர் சங்கமும் சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசில் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!