இலங்கை கிரிகெட் தொடர்பில் அமைச்சரவை உபக்குழு தயாரித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
#SriLanka
#Srilanka Cricket
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளது.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, குறித்த அறிக்கையின் மூலம் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த அறிக்கையும் புதிய விளையாட்டு சட்டமூலமும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.