பருத்தித்துறையில் எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்பட்ட பெண் அழகான குழந்தையை பிரசுவித்துள்ளார்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்பட்ட பெண் ஒருவர் ஒன்பதாவது தடவையாக கருவுற்று இன்று (01.01) அழகான பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மகப்பேற்று மருத்துவரை கேட்டபோது குறித்த 24 வயதான தாயார் திருமணம் முடித்த காலத்தில் தொடர்ச்சியாக எட்டுத்தடவைகள் கருவுற்றிருந்தார்.
எட்டுத் தடவையும் கரு சிதைவடைந்த நிலையில் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மகப்பேற்று வைத்தியர் சிவராஜா சிஜெதரா அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒன்பதாவது தடவையாக கருவுற்றிருந்த தாயாருக்கு கற்பமாவதற்கு முன்னரும், கற்பமாகிய பின்னரும் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஆரோக்கியமான குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.