இனப்பிரச்சினை தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்!
இந்த நாட்டில் வரிச்சலுகை இருந்த நிலையில், தற்போது வரி விதிப்பது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (1.01) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வரி விதிப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மக்களின் அன்றாட வாழ்வில் இலாபமில்லாமல் செயல்படுவதை ஏற்க முடியாது. மக்களின் பொருளாதாரத்தில் இருந்து இந்த வரிவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பது தேவையற்றதாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்த வரியை அரசு மிகக் குறைவாகவே மதிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அத்துடன் இனப்பிரச்சினை தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.