கிளிநொச்சி மாவட்ட செயலக புதுவருட கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு!

#SriLanka #Kilinochchi #New Year #இலங்கை #லங்கா4 #லங்கா4 ஊடகம் #LANKA4TAMILNEWS #Lanka4_sri_lanka_news #Lanka4_sri_lanka_tamil_news
கிளிநொச்சி மாவட்ட செயலக புதுவருட கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் சத்தியப் பிரமாண நிகழ்வு!

2024ம் ஆண்டிற்கான புதுவருடத்தின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(01) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

 குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. தேசியக் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து தேசத்திற்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூரும்முகமாக அகவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

images/content-image/1704104513.jpg

 தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான தமது கடமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். மேலும், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், குறித்த குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு தொடர்பாக உரையாற்றினார்.

 புதிய ஆண்டினை வரவேற்று கடமைகளினை பொறுப்பேற்கும் சத்திய பிரமாண நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட ஊடகப் பிரிவு, மாவட்ட செயலகம், கிளிநொச்சி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!