அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பது போலாகிவிட்டது
சமூகம் ஓவராக தூக்கிப் பிடித்தால் கொஞ்ச நாளில் அது கேலி செய்யப்படும் விடயமாக மாறும் என்று காலையில் ஒரு பதிவு போட்டு பிறகு அதை நீக்கிவிட்டேன். சொன்னது போல கொஞ்ச நாள் அல்ல ஒரு நாளிலேயே என் டைம் லைனில் அநேகமான பதிவுகள் இந்த சிறுமியை கேலி செய்யும் விதமாகவே இருக்கின்றன.
இவள் திறமையானவள். அவள் பெற்ற வெற்றியும் மிகப் பெரியதுதான். ஆனால் இதுதான் இவளது ஆரம்பம். இனி அவள் தன்னை ஒரு brand ஆக நிலைநிறுத்தி இந்த வெற்றியை தொடர வேண்டும். இலங்கையில் ஒரு தொழில் முறை பாடகியாக இருந்து வருமானம் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல.
அவள் இந்தியாவையும் , புலம் பெயர் தேசத்தையும் நம்பியே பாடகியாக நல்ல வருமானம் பெறும் நிலைக்குப் போகலாம். குடும்பத்தினரின் அனுமதி இன்றி அவளை கடத்தி சென்றது போல இந்த நிகழ்வுகளை செய்ததாக அவளது உறவினர் ஒருவரே பதிவு போட்டதால் இதைத் துணிந்து எழுதுகிறேன்.
சிலரின் சுய லாபத்திற்காக ஒரு திறமையான பிள்ளையின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள். இந்த நிகழ்வுகள் அவளுக்கு எதிராக கேலிகளை மட்டும் உருவாக்காது , சிலரால் தொழில்முறை ரீதியான அரசியல் அழுத்தங்களை உருவாக்கி அவளின் எதிர்கால வளர்ச்சியை அடக்கிவிடுமளவுக்கு செல்ல முடியும். அவள் இன்னும் சிறுமி. அவளுக்கு அப்படியான அழுத்தங்களை எதிர்கொள்ளும் வயது இல்லை.

முக்கியமாக அவள் மீது ஓவராக ஈழ அடையாளத்தை திணிப்பது அவளது branding யைப் பாதுகாக்கும். அவள் முக்கியமாக தன் பேஸ்புக் அட்மின் பதிவுகள் போடுவதை நிறுத்த வேண்டும். கொஞ்ச நாள் இந்த சலசலப்புக்களை குறைத்து , தன் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புக்களைத் தேடி தன்னை தொழில் முறை பாடகியாக நிலைநிறுத்த கவனம் செலுத்த வேண்டும்.
இந்த கொண்டாட்டம் எல்லாம் சில நாட்கள்தான். பிறகு எல்லாரும் மறந்து விடுவார்கள். இப்போது இருந்தே வாய்ப்புக்களை தேடி தன்னை நிலைநிறுத்த தவறினால் சில வருடங்களில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நல்ல வாய்ப்புக்கள் வராது. சின்ன வயதில் வரும் அதீத புகழ்ச்சி யின் பெரிய பிரச்சினை அதை தக்க வைக்காமல் போனால் , பெரியவர் ஆனதும் அது பாரிய அழுத்தமாக மாறும்.
ஆகவே அவள் பெற்றோர் கவனமாக இந்தப் பிள்ளையை வழிகாட்ட வேண்டும். இனியாவது புதினம் பார்க்கவும், செல்ஃபி எடுத்து போடவும் மட்டும் அவளை மற்ற ஆட்கள் பயன்படுத்தாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இது அவள் மீதான விமர்சனமல்ல. அவள் சிறுமி.
அவள் இன்னும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் சொல்கிறேன். எதிர்காலத்தில் அவளை ஒரு சித்ரா , ஜானகி , ஷ்ரேயா கோஷல் போன்ற ஒரு பாடகியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் எழுதுகிறேன்.