கணவனின் தாக்குதலிற்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதி! முல்லைத்தீவில் சம்பவம்

#SriLanka #Attack #Mullaitivu #Lanka4 #husband #wife
Mayoorikka
1 year ago
கணவனின் தாக்குதலிற்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதி! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியதில் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இதுதொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக நேற்று குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்ததாகவும், இதன்போதே கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

 இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த கணவன், குடும்ப முரண்பாட்டினால் குடும்பத்தினரை விட்டுபிரிந்து வாழ்ந்துள்ள நிலையில் மனைவியிடம் ஏற்பட்ட முன்கோபம் காரணமாக கத்தியால் தாக்கியுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் வருகை தந்து கணவனை கைதுசெய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!