கரையோர ரயில் சேவை நேர அட்டவணையில் மாற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கரையோர ரயில் சேவை நேர அட்டவணையில் மாற்றம்!

கரையோரப் பாதையின் ரயில் கால அட்டவணையை திருத்தியமைக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி இன்று (01.01.2024 ) முதல் மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ருஹுணு குமாரி புகையிரதம் இன்று அதிகாலை 5.25 மணியளவில் பெலியஅத்த புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்தது.  

இதுவரை வார நாட்களில் மட்டும் இயங்கி வந்த சகாரிகா எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமைகளிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 மேலும் வார நாட்களில் இரவு 8.35 மணிக்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை இயக்கப்படும் ரயில் இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு மருதானையில் இருந்து அளுத்கம வரை இயக்கப்பட உள்ளது. 

இந்த தொடரூந்து கால அட்டவணை திருத்தம் தொடர்பில் இரண்டு வாரங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், தொடர் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!