ரணிலின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
2024ம் ஆண்டு புத்தாண்டில் நாட்டிற்கான எமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் எமது தாய்நாட்டை மீண்டும் எழுப்பும் சவாலை வெற்றிகொள்வதற்கும் நாம் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் மக்கள் செய்த தியாகங்கள் மற்றும் கஷ்டங்கள் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான அடிப்படை அடித்தளம் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை புத்துயிர் பெறச் செய்யும் சவாலையும் நம்பிக்கையையும் மனதில் கொண்டு 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் நாம் பிரவேசிக்கின்றோம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தை மாத்திரம் அல்ல கடந்த காலத்தையும் உற்று நோக்க வேண்டும் எனவும், பரஸ்பரம் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னோக்கி நகர்த்தவும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடினமான பயணமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அது மலர்களால் மூடப்பட்ட மென்மையான பாதையல்ல எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.