மக்களின் உதவியை நாடும் சாதாரண உழைப்பாளர் குடும்பத்தை சேர்ந்த சிவகுமாரன் நிறோபன்
சாதாரண உழைப்பாளர் குடும்பத்தில் தன் தங்கை பெற்றோரோடு சந்தோசமாய் வாழ்ந்தவர் 26 வயதுடைய இந்த இளைஞன். தானுண்டு தன் வேலையுண்டு என்று தன் குடும்பத்தோடு இருந்த இந்த இளைஞனுக்கு திடிரென்று ஒரு நாள் உடல் வழமைக்கு மாறாய் மாறியது.
சரியாகும் என்று நம்பி தன் கடமையில் ஈடுபட்ட இளைஞனின் உடல் நிலை மேலும் மேலும் மோசமடைய, மருத்துவ மனையை நாடி ஓடினார், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
முழுமையான பரிசோதனைக்குப்பின் அவரையும் பெற்றோரையும் அழைத்த மருத்துவர் பெற்றோரைப் பார்த்து சொன்னார், உங்கள் மகனின் இரு சிறு நீரகங்களும் முற்றாக பழுதடைந்து விட்டன என்று மருத்துவர் கூறி முடிக்க. அந்த இடம் அமைதியானது மகன் அதிர்ந்தார், தாய் இடிந்து போய் அழத்தொடங்கினார்.
தந்தை உடைந்து போனார். சிறிய இடைவெளிக்கும் பின் மருத்துவரின் சில ஆலோசனைகளுக்குப் பின் நடைப்பிணங்களாக வெளியேறினர். இப்போ இளைஞனுக்கு மருத்துவ மனையில் செயற்கையாய் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது, இதுவும் சில காலம் தான் செய்ய முடியும் அவருக்கு சிறு நீரகம் மாற்ற வேணும் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

வீட்டில் நிம்மதியிழந்து பல நாட்களாகி விட்டது, தாய், தந்தை, மகன், ஒழுங்காய்த் தூங்கியே பல நாட்களாகி விட்டது. அதுவும் தாய் படுத்து திடீர் திடீரென்று பதட்டத்தோடு எழுந்து ஓடிப்போய் ஆயிரம் அர்த்தங்களோடு மகனைத் தொட்டுத் தொட்டு பார்க்கிறார். மருத்துவரும் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
விரைவாக மாற்றுச் சிறு நீரகம் பொருத்த ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறார். சாதாரண குடும்பம் தடுமாறி எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. ஆகவே உறவுகளே! நீங்களும் உங்களால் இயன்றதை இந்த சகோதரனுக்கு அது ஐந்நூறோ? ஆயிரமோ? என்றாலும் பரவாயில்லை உதவிடுங்கள்.
விபரங்களை தந்து தொடர்புகளையும் நாம் ஏற்படுத்தித் தருகிறோம். அதன் பின் மிகுதியெல்லாம் நீங்களே! அங்கு நீங்கள் நேரில் சென்றோ அல்லது அங்குள்ள உங்கள் உறவுகளை அனுப்பி பார்வையிட்ட பின்பாவது உதவியை புரிந்து விடுங்கள்.
உங்கள் பெயரைச் சொல்லி இந்தச் சகோதரன் வாழட்டும். அந்தத் தாயின் அழுகையொலி நிற்கட்டும். அந்த வீட்டில் நிம்மதி திரும்பி வரட்டும். அந்த இளைஞன் வாழட்டும்.
நன்றி
சிவகுமாரன் நிறோபன்
தொலைபேசி இலக்கம் - 0771752581
0775008507
People's bank: 048200250108460