2024 தேர்தல் : ஊடகப் பிரச்சாரத்தை ஆரம்பிக்க ரணில் விக்கிரமசிங்க திட்டம்!

#SriLanka #Election #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
2024 தேர்தல் : ஊடகப் பிரச்சாரத்தை ஆரம்பிக்க ரணில் விக்கிரமசிங்க திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசியத் தேர்தலுக்கான தனது ஊடகப் பிரச்சார வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 

அதன் பிரகாரம், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் மற்றும் ஊடகப் பிரிவுகளின் தலைவர்கள் தலைமையில் இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

ஊடகப் பிரச்சாரங்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.  சமூக ஊடகப் பிரச்சாரங்களில் அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஜனாதிபதியின் ஊடகப் பிரச்சார நடவடிக்கைகளின் குறைபாடுகள் குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பொறிமுறையை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!