களுத்துறை சிறையில் கைதி உயிரிழப்பு தொடர்பில் ஆரம்பமானது விசாரணை!
#SriLanka
#Lanka4
#Court
#lanka4Media
#lanka4news
PriyaRam
1 year ago
கைதிகள் இருவர் இடையிலான மோதலின் போது கீழே வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, குறித்த கைதியின் மரபணு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கைதிகளிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு கைதியுடன் ஏற்பட்ட மோதலின் போது கீழே வீழ்ந்த அவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.