இணையத்தளம் மூலம் இடம்பெறும் பாரிய மோசடி : பெண்களை குறிவைக்கும் கும்பல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையில் இணையத்தளங்கள் மூலம் இடம்பெறும் பணமோசடிகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்த வருடம் மாத்திரம் இணையத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட பணமோசடியில் 150இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றபிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் செல்வி தர்ஷிகா குமாரி தெரிவித்தார்.
தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களினால் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த பலர் மேற்படி முறைப்பாடுகளை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் இத்தகைய மோசடிகளுக்கு பெண்கள் பலியாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி மேலும்குறிப்பிட்டுள்ளார்.