அடுத்த ஆண்டு முதல் தபால் கட்டணத்தில் மாற்றம்!
#SriLanka
#prices
#Lanka4
Mayoorikka
1 year ago
2024 ஆம் ஆண்டு முதல் தபால் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாக தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தபால் கட்டணங்களை திருத்துவதற்கும் வற்வரி அதிகரிப்புக்கும் எவ்வித சம்பந்தங்களும் இல்லையென சிரேஸ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.