மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடை விதிப்பு
#Election
#Court Order
#America
#District
#President
#Ban
#Trump
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
Prasu
1 year ago

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.
சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அந்த மாகாணத்தில் டிரம்ப், அதிபருக்கான குடியரசு கட்சி முதன்மை தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது.இந்த நிலையில் மற்றொரு மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.



