ஒப்பனை பொருள் விற்பனையில் முதலிடம் பெற்ற பெண்

#France #Women #America #Bussinessman #Cosmatic #lanka4Media #lanka4_news #lanka4.com
Prasu
1 year ago
ஒப்பனை பொருள் விற்பனையில் முதலிடம் பெற்ற பெண்

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.

இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ், 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக இடம் பிடித்துள்ளார்.

மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.

2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.

 கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார், மேயர்ஸ்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!