தீவக கால்நடைகள் களவு விவகாரம்! பொலிசாரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடாத்துவதாக டக்ளஸ் உறுதி
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கம் கால்நடை களவுகள் தொடர்பாகவும் கால்நடை வளர்ப்பு பின்னோக்கி செல்வதற்கான காரணங்களையும் கூட்டத்தில் தெளிவுபடுத்தி இருந்தனர்.
வளர்ப்பு பசுக்கள் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் இறைச்சிக்காக அழிக்கப்படுவதையும் சுட்டி காட்டி இருந்தனர்.
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு லிட்டர் பசுப்பால் 60 ரூபாய் என்பதையும் 2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு லிட்டர் பசுப்பால் 220 ரூபாய்க்கும் அதிகம் என்பதையும் பசுக்கள் இறைச்சிக்காக கொலை செய்யப்படுவதால் பசுக்களின் விலை மிகப் பெரிய அளவில் அதிகரித்திருப்பதையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நாடு எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளை பசுக்கள் மூலம் தீர்வு காண முடியும் என்பதையும் பால், உரம், சமையல் எரிவாயு போன்றவை பசுக்கள் ஊடாக பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும் என்பதையும் அமைப்பின் செயலாளர் கூறி இருந்தார்.
பொலிஸாரிடம் கால்நடை களவு தொடர்பாக கேட்ட ஒருங்கிணைப்பு தலைவர் கால்நடை வளர்பாளர்களையும் பொலிஸாரையும் இணைத்து கூட்டம் ஒழுங்கு செய்வதாகவும் கூறியிருந்தார். வட மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.