இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள பணவீக்கம்! மத்திய வங்கி பணிப்பாளர் எச்சரிக்கை

#SriLanka #Central Bank #taxes #Lanka4 #inflation #money
Mayoorikka
1 year ago
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள பணவீக்கம்! மத்திய வங்கி பணிப்பாளர் எச்சரிக்கை

1.5 சதவீதமாக குறைவடைந்திருந்த இலங்கையின் பணவீக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் சடுதியாக என இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் முதலாம் திகதி முதல் வற் வரி திருத்தம் அமுலாகும் போது, பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும். 

 நாட்டின் பணவீக்கமானது அடுத்த வருடம் 5 சதவீதமாக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளில் வற் வரி தாக்கம் செலுத்துவதால் இந்த நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவீத வற் வரியானது, 18 சதவீதமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், தற்போது குறித்த வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள 69க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் அடுத்த வருடம் முதல் வற் வரி அறவிடப்படவுள்ளது.

 அதில் எரிவாயு, எரிபொருள், மருத்துவ உபகரணங்கள், கைப்பேசிகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன. இதனால் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, பொதுமக்களுக்கு, வற் வரி தாக்கத்தினை குறைக்கும் நோக்கில் எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு தற்போது 7.5 சதவீதமாக அறவிடப்படும் துறைமுகம் மற்றும் விமான மேம்பாட்டு வரி எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!