நாட்டில் குழந்தைகள் தொடர்பில் குழந்தை நல மருத்துவர் விடுத்த எச்சரிக்கை!
மழையுடன் கூடிய காலநிலை மற்றும் சனக்கூட்டங்கள் காரணமாக குழந்தைகளுக்கு தொற்றுநோய் அதிகரிப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .
இதனால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை காரணமாக வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளி விடுமுறையில் சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் குழந்தைகள், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை அதிகரித்துள்ளன என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவங்களை அணியுமாறும் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்