கம்பஹா வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் 63 வயதான பெண் மரணம்

#SriLanka #Covid 19 #Death #Hospital #Tamilnews #Gampaha #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
கம்பஹா வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் 63 வயதான பெண் மரணம்

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யக்கல - கொஸ்கந்தாவல பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதான பெண்ணொருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் அவர்களில் ஒருவர் இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த பெண்ணின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்படாது தனகம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கோவிட் வைரஸின் சமீபத்திய துணை வகை காரணமாக தற்போது தொற்றுநோய்க்கான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது.

அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!