வட்டுக்கோட்டை - அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வட்டுக்கோட்டை - அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை - அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியோரத்தில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. 

குறித்த இடத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் என பல பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. அத்துடன் சூழலுக்கு தீங்கான மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன.  

இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் சூழல் மாசடைவதுடன் டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் காணப்படுகிறது.

images/content-image/1703762791.jpg

இந்நிலையில் குறித்த பகுதிக்கு அருகாமையில் தனியார் கல்வி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது. ஆகையால் இந்த பகுதியில் உருவாகும் நுளம்பானது மாணவர்களை கடிக்கும் அபாயம் காணப்படுகின்றது. 

சுகாதார தரப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபையினர் அன்றாடம் இந்த வீதியால் பயணித்து வருகின்றனர். ஆனால் இவற்றினை கவனிப்பதாக தெரியவில்லை. 

வீடுகளிலும் வேறு இடங்களிலும் சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறு கூறி, டெங்கு அபாயம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் உத்தியோகத்தர்கள் இவற்றினை கண்டும் காணாதது போல் செல்வது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று மரணங்கள் டெங்கு தொற்றினால் சம்பவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!