டெங்கு ஒழிப்பு! பிரதேச செயலர்கள் மீது சீறிப்பாய்ந்த வடக்கு ஆளுநர்!
டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தில் பிரதேச செயலர்கள் ஒத்துழைக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் கவலை வெளியிட்டார் இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கருத்துரைக்கும் போது வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் என்பது குப்பைகளை அகற்றுவது மாத்திரமல்ல கைவிடப்பட்ட காணிகளில் உள்ள நுளம்புகள் பெருகும் இடங்களையும் துப்புரவு செய்ய வேண்டும்.

இந்த கைவிடப்பட்ட காணிகள் விடயத்தில் பிரதேச செயலர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தான் உண்மை நீண்ட காலமாக இந்த விடயத்தினை தெரியப்படுத்தியும் பிரதேச செயலர்கள் கைவிடப்பட்ட காணிவிடயத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இது எந்த அளவுக்கு டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி எனவும் தெரிவித்தார்,