மீன்பிடி விவகாரத்தினால் சூடு பிடித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
மீன்பிடி விவகாரத்தால் ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மீன்பிடி விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோது கருத்து தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் இந்தியாவிற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று இந்திய அரசுடன் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என தெரிவித்தபோது குறுக்கிட்ட கஜேந்திரன் எம்பி சாதாரணமாக டெங்கு விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுகின்றீர்கள் ஆனால் நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இந்த இந்திய இழுவை மடி பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என கடுந்தொனியில் தெரிவித்த போது குழப்பம் ஏற்பட்டு வாய்த்தர்க்ககமாக மாறியதால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
இடையில் குறிக்கிட்ட வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதி இங்கே வந்து குழப்ப வேண்டாம் நான் வடமராட்சியான் இங்கே வந்து உனது சேட்டையை வைக்க வேண்டாம் எனவும் அச்சுறுத்தும் பாணியில் மிரட்டியதோடு கஜேந்திரன் எம் பி யை தாக்கும் நோக்குடன் எம் பி யை நோக்கியும் வருகை தந்திருந்தார்,