மீண்டும் முகக்கவசம் - சுாதார அமைச்சரின் அறிவிப்பு!
இலங்கையில், சுகாதார பாதுகாப்புக்காக மீண்டும் முகக்கவசம் அணிவது தவறு இல்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கடந்த கொரோனா பரவல் காலப்பகுதியில், முகக்கவசம் அணிவதால் சுவாச நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த காலப்பகுதியில் சுவாச நோய்நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மீண்டும் முகக்கவசம் அணிவதில் தவறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் கடந்த காலங்களில் பரவலடைந்த காய்ச்சல் காரணமாக கொரோனா புதிய திரிபு இலங்கைக்குள்ளும் பரவலடைவதற்கு இருக்கும் அச்சுறத்தல் நிலைமைதொடர்பில் பரவலாக பேசப்பட்டது.

அதுதொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட சகல பிரிவுகளுக்கும் அறிவித்து உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நோய் நிலைமை தொடர்பில் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கடந்த காலம் முழுவதும் சிறந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.