ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்த புதிய நியமனங்கள்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு தலைவர் மற்றும் ஏனைய இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சேத்திய குணசேகர மற்றும் கே.பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.