மட்டக்களப்பில் சூறாவளி - பல வீடுகள் சேதம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
நேற்று முதல் வடக்கு கிழக்கில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளியினால் 15வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பல மரங்களும் முறிந்த நிலையில் வீதியில் காணப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
எனினும், தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதானிப்பு நிலையம் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.