தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பேராண்மையைக் கொடுத்தது கடல்சார் பாரம்பரியமே!

#SriLanka #Lanka4 #Prabhakaran #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பேராண்மையைக் கொடுத்தது கடல்சார் பாரம்பரியமே!

கடல்சார் பாரம்பரியமே தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு பேராண்மையைப் பெற்றுத் தந்தது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடல் வாழ்க்கை நில வாழ்க்கையைவிடச் சவால்கள் நிறைந்தது. கடலில் போனால் திரும்பி வருவோமா என்று தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை மரணபயத்தை அறவே இல்லாததாக்கியது. 

சூறைக் காற்றுக்கும் கொந்தளிக்கும் அலைகளுக்கும் எதிராக மேற்கொள்ளும் பயணம் பெரும் பயிற்சியாக அமைந்து உடலையும் மனதையும் வலுவாக்கியது. நிச்சயமற்ற வருவாய் பொருள் இழப்புக் குறித்த கவலையை இல்லாமல் ஒழித்தது.

இக்கடல்சார் பாரம்பரிய குணவியல்புகளுடன் இலட்சிய உறுதியும் சேர்ந்து தலைவர் பிரபாகரனுக்குப் பேராண்மையைப் பெற்றுத் தந்தது. அவரால் கடலையும் நிலத்தையும் குறிப்பிட்ட காலம் வரையிலேனும் கட்டிக்காக்க முடிந்தது. 

images/content-image/2023/12/1703747806.jpg

இன்று அவர் இல்லாத நிலையில் சூறையாடப்படும் கடலைப் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்பு நெய்தல் நில மக்களிடமே உள்ளது. பூமியின் வெப்பநிலை மிக உயர்வாக இருந்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. 

வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை கைத்தொழில்புரட்சி ஆரம்பமானபோது இருந்ததைவிட 1.5 பாகை செல்சியஸ் அளவில் உயரும் என்று விஞ்ஞானிகளால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இது பூமியின் காலநிலையில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. பூமி சூடாகுவதால் காலநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் நாம் ஏற்கனவே ஒருபுறம் கடும் மழையும் வெள்ளப்பெருக்கும், இன்னொருபுறம் கடும் வறட்சி, பனிமலைகளின் உருகுதல், கடல்மட்ட உயர்வு, பயிர் உற்பத்தி பாதிப்பு, உயிரினங்களின் அழிவு என்று பல பாதகங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம். 

கடலைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைத்து மக்களுக்கும் உண்டு. ஆனாலும் கடலின் பங்காளிகளான, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்ட கடற்றொழிலாளர்களுக்கு இந்தக் கடப்பாடு அதிகமாகவே இருக்கிறது. 

அதற்கான பட்டறிவும், பராக்கிரமும் இவர்களிடம்தான் அதிகளவில் இருக்கிறது. கடற்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அவசரப் பணியாக விரைந்து மேற்கொள்வதே பூமியில் எமது இருப்புக்கான உத்தரவாதமாக அமையும். 

இதுவே, கடற்கோளில் பலியான எம் உறவுகளுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!