வீடியோ கேம் தொடர்பில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்
#China
#world_news
#government
#Law
#Restrictions
#Video
#lanka4Media
#lanka4news
#lanka4.com
Prasu
1 year ago

சீனாவில் பொதுமக்கள் வீடியோ கேம் விளையாட செலவிடும் நேரத்தையும், பணத்தையும் குறைக்கும் வகையில் சீன அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.
குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதால், கல்வியும், உடல் நலனும் பாதிக்கப்படுவதாக கூறி, ஒரு மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கும் வகையில் சீனாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.
தற்போது, ஆன்லைன் கேமில் அதிக நேரத்தையும், பணத்தையும் செலவிட தூண்டும் விதமாக கேம் நிறுவனங்கள் பரிசுகளை அறிவிக்க தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும், வீடியோ கேம் விளையாடும்போது மக்கள் செலவிடும் பணத்துக்கு உச்சவரம்பு விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன அரசின் இந்த அறிவிப்பால் டென்செண்ட் என்ற முன்னனி வீடியோ கேம் நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் சரிந்தன.



