பிரபல எழுத்தாளர் பில் கிரங்கர் லண்டனில் உயிரிழப்பு
#Death
#Australia
#Food
#Lanka4
#London
#Heart Attack
#lanka4_news
#lanka4.com
#author
Prasu
1 year ago
அவுஸ்திரேலியாவை சேர்ந்த உணவக உரிமையாளரும், உணவுகள் குறித்து எழுதும் எழுத்தாளருமான பில் கிரங்கர் லண்டனில் உயிரிழந்துள்ளார்.
54 வயதான பில் உணவுகள் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்த புத்தகங்கள் எல்லாம் 1 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பில், 22 வயதில் தனது முதல் உணவகத்தை தொடங்கினார்.
இதோடு 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்கப்பட்ட ஐந்து சமையல் தொடர்களுக்கு தனது எழுத்துக்கள் மூலம் வடிவம் கொடுத்துள்ளார்.
உலகெங்கும் பெரும் புகழ்பெற்ற அவர் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.