தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 பேர் பலி

#Death #Hospital #Thailand #Flood #HeavyRain #Rescue #lanka4Media #lanka4_news #lanka4.com #Lanka4worldnews
Prasu
1 year ago
தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 பேர் பலி

தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் பெய்து கனமழை காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய தென் மாநிலங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. நராத்திவாட் மாநிலத்தில் 89 வயதான பெண்மணி,ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்கள் நீடித்த கனமழை வெள்ளத்தில் சிக்கி மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். வீதிகள் சேற்றில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் வீடுகளின் கூரைகளில் இருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

இவெள்ள நீரின் அளவு குறைந்துள்ளதாக தாய்லாந்து அனர்த்த தடுப்பு மற்றும் மீட்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!