டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
#Police
#Court Order
#America
#Case
#Trump
#Judge
#intimidating
#lanka4Media
#lanka4.com
#Lanka4worldnews
Prasu
1 year ago
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான பாராளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது.
மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது. அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை அவர்கள் வெளியிடவில்லை