இலங்கையின் பல மாவட்டங்களில் அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த சில காலமாக அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று (27.12) இடம்பெற்ற மத்திய கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தட்டம்மை நோயை தடுப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை 6-9 மாதக் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி அருகில் உள்ள மருத்துவ மனையில் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.