வெடிபொருள் மீட்பு சம்பவத்தால் சுவாரஷ்யமான கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம்!

#SriLanka #Meeting #Kilinochchi #Development #Lanka4 #lanka4Media
Mayoorikka
1 year ago
வெடிபொருள் மீட்பு சம்பவத்தால் சுவாரஷ்யமான கிளிநொச்சி அபிவிருத்தி குழு கூட்டம்!

வெடிபொருளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என முழங்காவில் வெடிபொருள் மீட்பு சம்பவம் தொடர்பில் கூறியவரிடம் பயிற்சி பெற விரும்புவதாக கூறிய பொலிசார் கூறியதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுவாரசியமான சம்பவமாக பேசப்பட்டுள்ளது.

 கடந்த சில நாட்களிற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பகுதியில் வெடிபொருள் தயார் செய்ததாக தெரிவித்து ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 குறித்த சம்பவத்தின் உண்மை நிலை தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உண்மையை விளக்குமாறு அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொலிசாரிடம் கேட்டிருந்தார்.

 படகு செய்யும் பொருளை பிளாஸ்ரிக் வகையான பொருளை பயன்படுத்தி பூச்சாடி போன்ற ஒன்றை செய்ததாக அறிந்ததாகவும், கிளைமோர் செய்ததாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறித்த கூட்டத்தில் தெரிவித்தார்.

images/content-image/2023/12/1703670026.jpg

 கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கைது தொடர்பில் உண்மை என்ன என்பது தொடர்பிலேயே அவர் சபையில் பொலிசாரிடம் வினவினார்.

 அதற்கு பதிலளித்த பொலிசார், குறித்த கைது பொலிஸ் திணைக்களத்தில் உள்ள ஒரு பிரிவான பயங்கரவாத தடுப்பு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டது.

 ஆனாலும், அவர் வெடி பொருள் ஒன்றை தயாரித்ததாக தெரிவித்தே அக்கைது சாட்சியங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. 

ஆயினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு அக்கைது அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

 சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலேயே முன்னெடுக்கப்படுவதால், அது தொடர்பில் எம்மால் தகவல்களை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்தனர்.

 கிளைமோர் குண்டுகள் செய்யப்படும் போது, தாக்குதல் மேற்கொள்பவருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கும் வகையில் இரும்பினால் ஆக்கப்பட்ட தகடுகள் மூலம் பாதுகாக்கப்படும். 

ஆனால், மீன்பிடி வள்ளம் செய்யும் மூலப்பொருளால் எவ்வாறு வெடிகுண்டு செய்ய முடியும் என அவர் பொலிசாரிடம் வினவினார்.

 அது வெடிபொருள்தான் என்பதாக அறிய முடிகிறது. பூச்சாடி போன்று இவ்வாறு வடிவமைக்கும் வெடிபொருளை எவ்வாறு தாக்குதல் நடத்துபவருக்கு பாதிப்பு இல்லாது பயன்படுத்துவது என்பது தொடர்பில் குறித்த விடயத்தை கூறிய நபரிடம் பயிற்சி பெற விரும்புவதாக பொலிசார் தெரிவித்தனர்.

 இதன் போது, அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இருந்தவர்கள் சுவாரசியமாக அவ்விடயத்தை பார்த்தனர். குறித்த வெடிபொருளில் இரும்பினால் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பகுதியையும் காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 ஆயினும், நாங்கள் சிரித்து விட்டு சாதாரணமாக கடந்து விடாது, இவ்வாறான கைதுகள் மூலம் எமது இளைஞர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

 சம்பவம் தொடர்பில் சாட்சியங்களுடன் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை பார்த்து செயற்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!