காசா எல்லைக்கு அருகே 1500 ஆண்டுகள் பழைமையான எண்ணெய் விளக்கு கண்டுப்பிடிப்பு!
#world_news
#Israel
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காசா எல்லைக்கு அருகே 1500 வருடங்கள் பழமையான பைசண்டைன் கால எண்ணெய் விளக்கைக் கண்டுபிடித்துள்ளனர்.
282 வது பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள், இதனை கண்டுப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Netanel Melchior மற்றும் Alon Segev ஆகியோர் இஸ்ரேலிய எல்லைக்குள் ஒரு அரங்கு பகுதியில் கலைப்பொருளைக் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன் வட்ட வடிவம் மற்றும் சேற்றால் மூடப்பட்ட வெளிப்புறத்தால் ஈர்க்கப்பட்ட மெல்ச்சியர் அதை சுத்தம் செய்து, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சமூக ஊடகங்களில் அதன் படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
குறித்த கலைப் படைப்பை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் (IAA) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சாரா தாலிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.