பொலிஸாரின் நீதி நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பம்!
#SriLanka
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான நீதி நடவடிக்கை இன்று (27.12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 03 நாட்களுக்கு நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்படிகடந்த 25ஆம் தேதி வரை போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 13,666 பேர் “நீதி” நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.