காலாவதியான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டதா? கெஹலியவிடம் விசாரணை
#SriLanka
#Keheliya Rambukwella
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சர்ச்சைக்குரிய தரமற்ற ஆன்டிபாடி ஊசி சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் 03 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் உள்ள எழுத்து மூலமும் ஏனைய ஆதாரங்களும் விசாரணைகளின் வசதிக்காக அவசியமானவை என கருதியதால் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்க தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெறிப்படுத்துவதற்காக தானாக முன்வந்து வாக்குமூலம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.