பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் இந்து மதப் பெண் சவீரா பிரகாஷ்

#Hindu #Election #world_news #Pakistan #லங்கா4 #லங்கா4 ஊடகம் #Lanka4worldnews #WorldNews #WorldTamilNews
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் இந்து மதப் பெண் சவீரா பிரகாஷ்

பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சவீரா பிரகாஷ் சமர்ப்பித்துள்ளார். பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

 இந்த தேர்தலில் இந்து மதப் பெண் ஒருவர் போட்டியிடப்போவதாக தெரியவந்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலை அவர் சமர்ப்பித்துள்ளார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

images/content-image/1703592584.jpg

 இவர் 2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றவும், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலுக்காக போராடும் அதே வேளையில் அவர்களின் உரிமைகளுக்காக வாதிடவும் இவர் இத்தேர்தலில் நிற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!