வடக்கு கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிவிப்பு!

#SriLanka #NorthernProvince #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
வடக்கு கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிவிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் (Equatorial Indian Ocean) வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளன.

குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

images/content-image/2023/12/1703591313.jpg

இதன் காரணமாக இன்றுள்ள வானிலை அமைப்பின்படி இன்று அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது இடையிடையே ஓரளவு மழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!