ஆழிப்பேரலை நினைவு தூபியில் சுனாமி பேபி அஞ்சலி!
#SriLanka
#Lanka4
#tsunami
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்தநிலையில், சுனாமி பேபி என அழைக்கப்படும் அபிலாஷ் ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் தனது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் பெற்றோருடன் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பேரழிவில் சிக்குண்டு 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.
அத்துடன், ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.