களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளான கைதி உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Prison
#Lanka4
#prisoner
#lanka4Media
#lanka4_news
PriyaRam
1 year ago
களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளான கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகொட களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை - வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.